11 Rules Of Life , Don't Miss IT.

 சுய முன்னேற்ற நூல்கள் நிறையக் கிடைக்கின்றன.  எத்தனையோ பேரின் வாழ்வில் அவை நல்ல மாற்றங்களையும் கொடுத்துள்ளன.


Maxwell Maltz  எழுதிய Psycho Cybernetis  , Shiv Khera வின் You can Win ஆகியவை  நான் பரிந்துரைக்கும் அட்டகாசமான நூல்கள் .


பொதுவாக, தன் முன்னேற்ற நூல்கள் பெரும்பாலும் இரண்டு வகைகளில் இருக்கும்.  ஒருவகை, மோட்டிவேஷனல் ஸ்டோரீஸ் மூலம் நம்மை ஊக்கப்படுத்திச் செயல்படத் தூண்டுபவை.  மற்றொரு வகை நாம் பின்பற்ற வேண்டிய செயல்பாடுகளைப் படிப்படியாக விவரிப்பவை.


 இவற்றுள் இரண்டாம் வகையைச் சேர்ந்ததுதான் அண்மையில்  வெளியான Chetan Bhagat எழுதிய  11 Rules Of Life  என்னும்   நூல் .


Time இதழில் 100 Most Influential People In The World  என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ள Chetan  குறித்து அதிக அறிமுகம் வேண்டியதில்லை . அவரே சொல்லிக் கொள்வதைப் போல அவர் ஒன்றும் Best Author இல்லை என்றாலும் Best Selling Author . 

நிறைய உயரங்கள் தொட்டவர்.


 அவருடைய புனைவுகள் எல்லாமே  Unputdownable  வகையைச் சேர்ந்தவை . அவரது பத்து நாவல்களுமே முதல் பக்கத்தைத் திறந்து படித்து விட்டால் கீழே வைக்கவே முடியாமல் கடைசிப் பக்கம் வரை ஒரே மூச்சில்  படிக்க வைத்து விடும்.


குறிப்பிடத் தகுந்த இந்திய ஆங்கில‌ எழுத்தாளர்களில்  Ruskin Bond உக்கு மென்மையான நடை, R.K. நாராயணனுக்கு மென்பகடி, அருந்ததி ராய்க்கு விரிவான விவரிப்பு , விக்ரம் சேத்துக்கு கவித்துவ நடை ஆகியவை ஸ்பெஷாலிட்டி என்றால் Chetan Bhagat உக்கு விறுவிறுப்புதான் ஸ்பெஷாலிட்டி.


 அவரது அபுனைவுகள் கொஞ்சம் சலிப் பூட்டுபவைதான்.  Times Of India வின் Coloumnist ஆன அவரது கட்டுரைகளும் ,பத்திகளும்  சில சமயங்களில் சற்று மிகையாகத் தெரிந்தாலும் மனிதர் பெருஞ்சரக்கு உள்ளவர் .


இந்த 11 Rules Of Life  நூலில் அவர் கூறியிருப்பவை எல்லாமே இன்றைய சூழலுக்குத் தேவையானவை. அதிலும் குறிப்பாக Career இன்  தொடக்கத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் பிராக்டிக்கலான டிப்ஸ் மூலம் நிறைய விஷயங்களை சுவாரசியமாக விளக்கி இருக்கிறார்.  


சராசரி வாழ்வைத் தாண்டி ஏதேனும் சாதிக்க விரும்புபவர்களுக்கு இந்நூலும்  ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.. முயன்று பார்க்கவும்.

Comments

  1. ஒரு புத்தக கண்காட்சிக்கு ஒவ்வொருவரையும் செல்ல தூண்டும் வாக்கியங்கள்

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?