விருத்தமும் விஜயலட்சுமி அம்மாவும்
"சுழித்துக்கொண்டோடும் வெண்பாக்களும் நுரைத்துக் கொண்டோடும் விருத்தங்களும்" என்று ஓரிடத்தில் வைரமுத்து அவர்கள் கூறியிருப்பார்.
ஆசிரியப்பாவின் இனங்களுளொன்றான ஆசிரிய விருத்தம் என்பது கவிஞர்கள் பலருக்கும் பெருவிருப்பான, இனிமையான பாவினம்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் ஆரம்பித்து எழுசீர்,எண்சீர் எனப் பன்னிரு சீர் வரையும் செல்லும்.
ஒவ்வொரு விருத்தமும் நான்கடிகளைக் கொண்டிருக்கும். ஒவ்வோரடியிலும் ஆறு,ஏழு,எட்டு என 12 வரை சீர்கள் அமைந்திருக்கும் .
அடிகள் தோறும் இச்சீர்கள் ஒரே அளவில் அல்லது ஒரே வாய்பாட்டில் வந்திருக்கும்.
இயற்சீரும் வெண்சீரும் மட்டுமே வரும்.
முதலடியில் என்ன விதமான சீர்கள் வருகின்றனவோ அவையே முறை மாறாமல் அடுத்தடுத்த அடிகளிலும் வந்திருக்க வேண்டும் .
நான்கடிகளிலும் ஒரே எதுகையும், அடிகளுக்குள் மோனையும் வந்திருக்க வேண்டும் .
"கழிநெடில் நான்கு ஒத்திறுவது குறைவில் தொல்சீர் அகவல் விருத்தம்" என்பது ஆசிரியர் விருத்தத்துக்கான யாப்பருங்கலக் காரிகை தரும் இலக்கணம்.
இத்தகைய இனிமையான பாவினமான விருத்தம் பாடுவதில் வல்லவரான திருமதி சு .விஜயலட்சுமி அவர்களின் விருத்தங்களை இலக்கிய விருந்தெனவே சொல்லலாம்.
நீரோட்டம் போன்ற தெளிந்த நடை ,பொருத்தமான சொற்கள், எளிய பொருள்கோள், சுகமான எதுகை மோனை எனச் சொற்களில் சிலம்பமாடும் அவரது பாடல்கள் படிக்கும் தோறும் இன்பம் நல்குபவை .
சகோதரியின் வரிகள் மரபில் ஊறித் திளைப்பவர்களுக்கு இனிய அனுபவமாக இருக்கும்.
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!