அழுகிறானா ....அழுகுகிறானா?

 அழுகிறானா ....அழுகுகிறானா?

தொழிற்பெயரான அழுதல் என்பது ஒரு செயல்.

அழுதான்

அழுகிறான் 

அழுவான் என்று சொல்லும்

பெரும்பாலானோர் எதிர்மறையாகச் சொல்லும் போது,

அழுகவில்லை,

அழுக மாட்டான்,

 இனிமேல் அழுகப்போவதில்லை என்றே சொல்கிறார்கள் .

அழவில்லை 

அழமாட்டேன் 

அழப்போவதில்லை என்பது சரி.

அழுகுதல்

அழுகவில்லை 

அழுகப்போவதில்லை 

அழுக மாட்டேன் என்பதெல்லாம் பழங்களையோ காய்கறிகளையோ சொல்லும் போது பயன்படுத்தப்பட வேண்டியவை .

அழுதல் வேறு அழுகுதல் வேறு

அழுதது வேறு அழுகியது வேறு

அழவில்லை வேறு அழுகவில்லை வேறு.

'அழுவான்' என்றால் துன்பம் தாங்காமல் அழுவான் எனப் புரிந்து கொள்ளலாம் .'அழுகுவான்' என்றால் அவன் இறந்த பிறகு அவனது பிணம் அழுகிப் போய்விடும் என புரிந்து கொள்ளலாம் .

இதுவே தான் தொழுதலுக்கும்.

தொழுதல் 

தொழவில்லை 

தொழுவேன் 

தொழ மாட்டேன் 

தொழப் போகிறேன் 

தொழச் சொன்னேன் ஆகியவை சரியான பயன்பாடுகள்.

தொழுகுதல்

தொழுகவில்லை

தொழுகுவேன்

தொழுக மாட்டேன்

தொழுகப் போகின்றேன்

தொழுகச் சொன்னேன் ஆகியவை தவறான பயன்பாடுகள்.


Comments

Popular posts from this blog

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

கூகுள் மேப்ஸ் - நல்லதொரு நண்பன்

கொஞ்சம் இதையும் தெரிந்து கொள்வோம்