Posts

Showing posts from 2021

Silent Valley - சைலண்ட் வேலி - ஆர்ப்பரிக்கும் அமைதி

கோயம்புத்தூரில் இருந்து எட்டிப் பிடிக்கும் தூரத்தில் அமைந்துள்ள சைலன்ட் வேலி (Silent Valley) யில் இயற்கையின் பிரமாண்டத்தைத் திகட்டத் திகட்ட அனுபவிக்கலாம். விடுவோமா நாம்.... வானம் இளமழையைத் தூவிக்கொண்டிருந்த விடிகாலை ஒன்றில் வண்டியைக் கிளப்பினோம். கோவையிலிருந்து தடாகம் சாலையில் மாநகராட்சி எல்லை முடிந்து புறநகர்ப் பகுதி கடந்ததும் V வடிவத்தில் விரிந்து கிடந்த மலைத் தொடர்களுக்கு நடுவில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் சூழப் பயணிக்க,மாங்கரை செக்போஸ்ட் வருகிறது. அதனைக் கடந்ததுமே மலைச்சாலை தொடங்கிவிடுகிறது.பசுமை சூழ வளைந்து செல்லும் சாலையில் காற்றின் புத்துணர்ச்சியை நுகர்ந்து கொண்டே செல்ல வழியில் உலகப் புகழ்பெற்ற சலீம் அலி பறவையியல் ஆராய்ச்சி நிறுவனம் ( Salim Ali International Ornithology Center ) மலைச் சாலையில் இருந்து விலகி உள்ளடங்கிப் பெருமிதத்துடன் நிற்கிறது. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. அலுவல் நிமித்தமாக ஒருமுறை அடியேனுக்கு உள்ளே செல்லும் வாய்ப்புக் கிடைத்தது .வேறோர் உலகத்தில் இருந்தது போலத் தோன்றிய புதுமையான அனுபவம் அது. 15 நிமிடங்களில் ஆனைகட்டியை அடைகிறோம். தமிழ்நாடு- கேரள...

தமிழமிழ்து - 2

ஆங்கிலத்திலும் தமிழிலும் வினோதமான ஒற்றுமைகளைக் கொண்ட சொல் இணை ஒன்றை இன்று பார்ப்போம். ஆங்கிலத்தில் வார் என்பது தமிழில் போர் ... தமிழில் வார் என்பது ஆங்கிலத்தில் போர் ...    புரியவில்லை தானே.....?    தொடர்ந்து படியுங்கள்... !       ஆங்கிலத்தில் WAR ( வார் ) என்னும் சொல்லுக்குத் தமிழில் போர் என்று பொருள்.   அதுவே தமிழில் வார் என்னும் சொல்லானது வார்த்தல்,வார்ப்பு என்ற பொருளில் வரும் பொழுது அதற்கு இணையான ஆங்கிலச்சொல் போர் ( POUR ) என்பதாகும்.    எனவே,    ஆங்கிலத்தில் வார் - தமிழில் போர் .    தமிழில் வார் -ஆங்கிலத்தில் போர் .          ஆச்சரியமான ஒன்றுதான் ... இல்லையா...?

நீ

பேரிருளும்  நிலவொளியுமாய்க்   கிடக்கின்றன   நீ ததும்பி வழியும்    இரவுகள்...! எழுதாத வரிகளின்  அழகான கவிதை நீ...!

தோனி அருவியும் கவத்தீவுகளும்- அழகும் அமைதியும் தழுவுமிடங்கள்

Image
கிரிக்கெட் வீரர் தோனியைப் போலவே Chill,cool ,Free flowing type தான் தோனி அருவியும்.  பாலக்காட்டு மலைகளுக்கு இடையில், அவ்வளவு எளிதில் யாரும் சென்று பார்த்துவிட முடியாத ஓர் உள்ளடங்கிய பகுதியில் ஒய்யாரமாக ஒளிந்து கொண்டிருக்கிறது இந்தத் தோனி அருவி. உயிரினங்களில் மனித நடமாட்டம் மிகக் குறைவாகவும் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகவும் உள்ள தோனி அருவி த்ரில் விரும்பிகளுக்கும் இயற்கைப் பிரியர்களின் அடங்காத ஆர்வத்திற்கும் தீனி போடக்கூடிய அற்புதமான ஸ்பாட். நிறையக் கட்டுப்பாடுகளுடன் தான் தோனி அருவிக்குள் பார்வையாளர்களை அனுமதிக்கிறார்கள்.  காலை 10 மணிக்கு ஒரு பேட்ச், நண்பகல் ஒரு மணிக்கு ஒரு பேட்ச் என இரண்டு அனுமதிகள் தான் .  நாங்கள் தேர்வு செய்தது காலை நேரத்தை.   அதற்கு முன்பாக மலம்புழப் பகுதியில் உள்ள கவத் தீவுகளைக் காலை 7 மணிக்கெல்லாம் பார்த்து விடுவது என வாளையாரில்  ஆளுக்கு ஒரு ப்ளாக் டீயை   மட்டும் உறிஞ்சிவிட்டு நான்கு பேராகக் கவத்தீவுகளை அடைந்துவிட்டோம்.    மிகப் பெரிய நீர்ப்பரப்பு விரிந்து கிடக்கும் மலையின் பின்பகுதியில் மலைத்தொடரை ஒட்டிச் செல்லு...

காதலெனும் காற்புள்ளி

எங்கும் விரவி இந்தப் பேரண்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பேராற்றலான காதலைப் பாடியிருக்கும் கவிதைநூல் தான் காதலெனும்  காற்புள்ளி..... காதலில் தோய்த்தெடுத்த சொற்களைக் கொண்டு குட்டிக் குட்டியான அழகுக் கவிதைகளை இந்த நூல் முழுவதும் அள்ளித் தெளித்திருக்கிறார் கவிஞர்.   "சோபியா ...சோபியா..."  என ஷஸ்வத் சிங் வசீகரிக்கும் குரலில் உருகிக்கொண்டிருந்த பாடலுடனான மாலைநேர மழைச்சாரலில் வாசிக்க நேர்ந்த காதலெனும் காற்புள்ளி நூல் முழுவதும் காதலின் போதை சொட்டுவதை உணரமுடிந்தது. தேர்ந்தெடுத்த சொற்கள்...  சுருக்கமான வரிகள்....   அழகான வடிவம் ...   சுவையான நடை ...   கவிதைகளின் ஊடே காதலில் தொலைந்தவன் ஒருவனின் ஏக்கமும் பெருமூச்சும் இழைந்து கொண்டே இருக்கிறது .    "நீ நனையும் போதெல்லாம்  கொஞ்சம் கூர்த்து பார்   நானும் கரைந்து இருப்பேன்....."     என்ற வரிகள் நூலின் முத்தாய்ப்பென நான் உணர்ந்த தருணத்தில் பின்னட்டையிலும் அதே வரிகள்..... வாசிக்கும்போதே கரைவதை உணரமுடிகிறது .    "உலக அழகிப் போட்டிக்கு உன் நிழலைப் படம் எடுத்து அனுப்பு ...

முடிவற்ற சாலை....

  அஃதொரு காலைநேரத் திங்கள்கிழமை.   “சங்கரன்கோவில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்து நிமிட வேலை ஒன்று இருக்கிறது.புதன்கிழமை போயிட்டு வந்துடலாமா…?” என அலைபேசியில் கேட்டார் நண்பர் ஆண்டனி.   கோயம்புத்தூரிலிருந்து ஆறுமணி நேரப் பயணம்.   ”அப்படியா….?” என ஒரு கணம் யோசித்தேன்.   “சங்கரன்கோவிலில் பதினோரு மணிக்கெல்லாம் வேலை முடிஞ்சுடும்.அப்படியே குற்றாலம் போய்க் குளிச்சிட்டு, செங்கோட்டை பார்டர் கடைல ஈவினிங் பரோட்டாவையும் சாப்ஸையும் ஒரு வெட்டு வெட்டிட்டு வரலாம்”          என்று அடுத்த அஸ்திரத்தை எறிந்தார்.   இது போதாதா…”எத்தனை மணிக்குக் கிளம்பணும் ..?” என்று கேட்டுவிட்டு , “போறதுதான் போறோம்…அப்படியே தென்மலையையும் ஒரு எட்டுப் பார்த்துட்டு வந்துடலாம் ” என்றேன்.    பதிலுக்கு அவர் “தென்மல போறதுன்னு ஆயிடுச்சு..அப்படியே கொல்லம் பீச்சுல கொஞ்சம் நேரம் காத்து வாங்கிட்டுக் கடல் தண்ணில கால நனைச்சுட்டு கொச்சின் வழியாக் கோயம்புத்தூர் வந்துடலாம்” என்றார்.       ”கொல்லம் போறதுக்குப் பதிலா தென்மலையில் ...