தமிழமிழ்து - 2
ஆங்கிலத்திலும் தமிழிலும் வினோதமான ஒற்றுமைகளைக் கொண்ட சொல் இணை ஒன்றை இன்று பார்ப்போம்.
ஆங்கிலத்தில் வார் என்பது தமிழில் போர்...
தமிழில் வார் என்பது ஆங்கிலத்தில்
போர்...
புரியவில்லை தானே.....?
தொடர்ந்து படியுங்கள்... !
ஆங்கிலத்தில் WAR (வார் ) என்னும் சொல்லுக்குத் தமிழில் போர் என்று பொருள்.
அதுவே தமிழில் வார் என்னும் சொல்லானது வார்த்தல்,வார்ப்பு என்ற பொருளில் வரும் பொழுது அதற்கு இணையான ஆங்கிலச்சொல் போர் (POUR) என்பதாகும்.
எனவே,
ஆங்கிலத்தில் வார்- தமிழில் போர்.
தமிழில் வார் -ஆங்கிலத்தில் போர்.
ஆச்சரியமான ஒன்றுதான் ...
இல்லையா...?
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!