எண்ணை.... எண்ணெய்...எது சரி ?
பலரும் எண்ணை என்று சொல்லியும் எழுதியும் வருகின்றனர். எண்ணெய் என்பதுதான் சரி. அதிலும் எண்ணெய் என்பது நல்லெண்ணெய் எனப்படும் எள் எண்ணெயை மட்டுமே குறிக்கும் .ஆனால் வழக்கத்தில் எண்ணெய் என்பது பொதுப்பெயர் ஆகி வெகு நாட்கள் ஆகிவிட்டது. எள் +நெய் என்பதே எண்ணெய் எள் + நெய் ~ எண்ணெய் நெய் என்பது பொதுப்பெயராகத்தான் இருந்திருக்கிறது. எள்ளில் இருந்து எடுக்கப்படும் நெய்தான் எண்ணெய். எள்+ நெய் எப்படி எண்ணெய் ஆகிறது ....? மெய்யீற்றுப் புணர்ச்சி விதியைப் பார்ப்போம். இரண்டு சொற்கள் ஒன்றுடன் ஒன்று புணரும் போது முதற்சொல்லான நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அது மெய்யீற்றுப் புணர்ச்சி ஆகும். எள் +நெய் என்பதில் 'ள்' என்னும் மெய்யெழுத்து நிலை மொழியின் ஈற்றெழுத்தாக இருக்கிறது. வருமொழியின் முதல் எழுத்துக்கள் 'த' அல்லது 'ந' என்பனவாக இருக்கும் பொழுது நிலை மொழியின் ஈற்றெழுத்துக்கள் ன்,ல்,ண்,ள் என்பனவாக இருந்தால் புணர்ச்சி எப்படி நடக்கும் எனக் கீழ்க்காணும் நன்னூல் விதி கூறுகிறது. ”னலமுன் றனவும், ணளமுன் டணவும், ஆகும் தநக்கள் ஆயுங் காலே” (நன்னூல், 237) இவ்வித...
சகோதரரே!
ReplyDeleteஇன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளனர்.
அதுகண்டு இங்கு வந்தேன். பிரமித்தேன். வாழ்த்துக்கள்! அருமை!!!
ஆழியாழம் அமிழ்ந்தும்...
ம்... உங்கள் கவியாழம் கண்டிட எனக்கு அவகாசம் வேண்டும்...:)
மீண்டும் வந்து மீட்கிறேன். வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் திறமை...
சகலாரதனையுடன் கூடிய சம்போகித சித்திரத்தை மனதின் காட்சிப் பேழையின் உள் கனகச்சிதமாக இட்டு அதனூடே ரத்தினத்தின் மாட்சிமையாக கற்றாளை கற்றில் பாயும் வெயில் போல உவமைகள் வந்து விழுந்திருக்கிறது உங்கள் கவிச்சோலையின் விரித்தவெளிகளில்.
ReplyDeleteஅன்புடன்
கவிஞர்.பக்ஷிராஜன்
ReplyDeleteவணக்கம்!
அன்பால் அளித்திட்ட ஐந்து கருத்துக்கள்
என்பால் இருக்க இனித்தனவே! - நண்பா!
பெருகும் தமிழுணா்வைப் பெற்றவுன் நட்பால்
உருகும் என்றன் உயிர்!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அருமை...
ReplyDeleteஅருமை
ReplyDeleteஆழ்ந்த வரிகள்....அருமை
ReplyDeleteஆழ்ந்த வரிகள்....அருமை
ReplyDelete