ஒளியூறிய நீர்ப்பரப்பின் மேல் தோன்றுகின்ற சிற்றலைகள்.


ஆழியாழம் அமிழ்ந்தும்
கட்டற்றுத் தெறித்துச்
சுழலும் புவித்திசைக்கு
எதிர்ப்பயணம் மேற்கொள்ள,
எங்கிருந்துதான் எண்ண‌ங்களை
இழுத்துச் செல்கின்றன‌
மறைகின்ற கதிரின்
மெல்லிய மஞ்சள் விரவிய‌
ஒளியூறிய நீர்ப்பரப்பின் மேல்
தோன்றுகின்ற சிற்றலைகள்...?

Comments

  1. சகோதரரே!
    இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளனர்.
    அதுகண்டு இங்கு வந்தேன். பிரமித்தேன். வாழ்த்துக்கள்! அருமை!!!

    ஆழியாழம் அமிழ்ந்தும்...
    ம்... உங்கள் கவியாழம் கண்டிட எனக்கு அவகாசம் வேண்டும்...:)
    மீண்டும் வந்து மீட்கிறேன். வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் திறமை...

    ReplyDelete
  2. சகலாரதனையுடன் கூடிய சம்போகித சித்திரத்தை மனதின் காட்சிப் பேழையின் உள் கனகச்சிதமாக இட்டு அதனூடே ரத்தினத்தின் மாட்சிமையாக கற்றாளை கற்றில் பாயும் வெயில் போல உவமைகள் வந்து விழுந்திருக்கிறது உங்கள் கவிச்சோலையின் விரித்தவெளிகளில்.
    அன்புடன்
    கவிஞர்.பக்‌ஷிராஜன்

    ReplyDelete

  3. வணக்கம்!

    அன்பால் அளித்திட்ட ஐந்து கருத்துக்கள்
    என்பால் இருக்க இனித்தனவே! - நண்பா!
    பெருகும் தமிழுணா்வைப் பெற்றவுன் நட்பால்
    உருகும் என்றன் உயிர்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  4. ஆழ்ந்த வரிகள்....அருமை

    ReplyDelete
  5. ஆழ்ந்த வரிகள்....அருமை

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

நூல் வெளியீடு

ஆனாலும் பாவமந்த அரசுப் பேருந்து நடத்துனர்.