ஏக்கப் பெருமூச்சின் எழுத்துவடிவம்
தலைவனைப் பிரிந்த தலைவி, ஆற்றாமல் தோழியிடம் எறிந்த ஏக்கப் பெருமூச்சின் எழுத்துவடிவமிது! மூன்றாம் கோணம் வலைபத்திரிகை- கவிதைப்போட்டி- http://inthiya.in/ta/?p=7304 மாலை கவிந்ததடி- என் மனதும் கனிந்ததடி-தோழீ இருளும் குவிந்ததடி - என் இதயம் குளிர்ந்ததடி! இதயத்தி லிருப்பவர்போல் - என்னை இருளும் தழுவியதடி- பிரிவால் புழுதி படிந்திருந்த -மனதைப் பூசிக் கழுவியதடி! கூட்டை அடைந்திடவே- பறவைக் கூட்டம் விரைந்ததடி - இதயக் கூட்டில் வசிப்பவருடன் - மனது கூடிக் கரைந்ததடி! மேற்கே சூரியனும் - மங்கி மெல்ல மறைந்ததடி.- என் மேனி தவித்ததடி - அவரை மேயத் துடித்ததடி! மாலைக் குளிரினைச் - சுமந்து மாருதம் வீசியதடி - என்னை மாலை யிடுபவரின் - சேதியை மனதில் பேசுதடி! நிலவும் எழுந்ததடி - வெண்மை நிறமும் பரவுதடி - இந்த நிமிடம் அவரருகில் - இருக்க நினைவு துடிக்குதடி! வெள்ளிப் பூக்களினால் - கருப்பு வானம் சிரிக்குதடி - என் வெல்லக் கட்டியவரை - விழிகள் வெல்லத் துடிக்கு...