பூர்த்தி செய்ய வேண்டாம்; நிரப்பினால் போதும்..!

 பூர்த்தி செய்ய வேண்டாம்; நிரப்பினால் போதும்..!

பூர்த்தி செய்யவும்.
ஃபில் ( FILL ) பண்ணவும்.

இவ்வாறு செய்யவும், பண்ணவும் போன்ற சொற்களை இணைத்துப் பயன்படுத்துவது இப்பொழுது பெருவழக்காகியிருக்கிறது.

பொதுவாக, பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தும் போதுதான் இந்த செய்யவும், பண்ணவும் போன்ற சொற்கள் பின்னொட்டாகத் தேவைப்படும்.

சான்றுக்கு,
ரீட் (READ ) பண்ணு
ரைட் (WRITE) பண்ணு
பேஸ்ட் (PASTE )பண்ணு
பூர்த்தி செய்யவும்
ஃபில் (FILL )பண்ணு
குக் (COOK) பண்ணு
ஓபன் (OPEN) பண்ணு
க்ளோஸ் (CLOSE ) பண்ணு
ஸ்டார்ட் (START) பண்ணு
ஆப்பரேட் (OPERATE ) பண்ணு ...

பட்டியலுக்கு முடிவே இல்லை....

எளிமையாக , இனிமையாக இவற்றைச் சொல்ல முடியும்.
ரீட் (READ ) பண்ணு -படி
ரைட் (WRITE) பண்ணு - எழுது
பேஸ்ட் (PASTE )பண்ணு -ஒட்டு
பூர்த்தி செய்யவும் -நிரப்பு
ஃபில் (FILL )பண்ணு -நிரப்பு
குக் (COOK) பண்ணு -சமை
ஓபன் (OPEN) பண்ணு - திற
க்ளோஸ் (CLOSE ) பண்ணு - அடை அல்லது மூடு
ஸ்டார்ட் (START) பண்ணு -தொடங்கு
ஆப்பரேட் (OPERATE ) பண்ணு -இயக்கு

ஆனாலும் நமக்கு பண்ணு என்ற சொல் தேவைப்படுகிறது.

பூர்த்தி என்பதற்கு இணையாக நிறைவு அல்லது முழுமை ஆகிய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தலாம் .

நேர்த்தி, சேர்த்தி போன்ற சொற்களையொத்து தமிழ்ச் சொல்லுக்கான ஒலிப்பு முறைக்குள் வருவதால் பூர்த்தியைப் பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்,
படிவத்தைப் பூர்த்தி செய்வோம் என்று சொல்வதற்குப் பதிலாக விண்ணப்பத்தை நிரப்பவும்
படிவத்தை நிரப்பவும் என்று சொல்லும் பொழுது இயல்பாக இருக்கும்.
இன்னும் சொல்லப்போனால் படிவத்தை நிரப்பவும் என்பதை விட, படிவத்தில் நிரப்பவும் என்பதே தெளிவாக இருக்கும் .

ஆங்கிலத்தில் கூட fill in the form , fill out the application என்று தான் சொல்வார்கள். ஃபார்ம் என்பது தமிழில் பாரம் என்று வழங்கப்படுகிறது ,க.சீ. சிவக்குமார் அவர்கள் சொன்னது போல மொழியின் வினோதமான நிகர் நிலைப் பரிமாணங்களில் இதுவும் ஒன்று.

இனிமேல் நிரப்பு என்ற சொல்லை யூஸ் பண்ணுவோம் ....Sorry...பயன்படுத்துவோம்.

Comments

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி