எழுத்துகளை மிச்சம் பிடித்து என்ன செய்யப் போகிறோம் ?
தைபூச தேர் திருவிழா - தைப்பூசத் தேர்த் திருவிழா
இரண்டுக்கும் மூன்று மெய்யெழுத்துகள்தாம் வேறுபாடு.
ஆனாலும் மெய்யெழுத்துகளைத் தவிர்த்து விட்டுச் சந்திப்பிழைகளுடன் வாழப் பழகிவிட்ட நாம் இப்பொழுதெல்லாம் இதைப் பொருட்படுத்துவதே இல்லை.
அதிலும் நண்பரொருவர் கேட்டதுதான் இங்கு உச்சக்கட்டம்....
"புள்ளி வச்ச எழுத்து இல்லேன்னாத்தான் என்ன...அதான் படிச்சதும் புரியுதே....அப்புறம் என்ன ....?" என்றார் .
சரிதான்....படித்தால் புரிந்து விடும்தான்.
அவருடைய பெயரில் இருந்து மெய்யெழுத்தொன்றை நீக்கி விட்டு எழுதிக்காட்டினேன் . தலையிலடித்துக் கொண்டு ஒத்துக்கொண்டார். அவரது பெயரை இங்கு சொல்ல முடியவில்லை.
தைப்பூசத் தேர்த் திருவிழா என்று வல்லின ஒற்றுகளுடன் சந்திப்பிழைகளற்று எழுதும் பொழுது அத்தொடர் அழகும் முழுமையும் அடைவதை உணர வேண்டும்.
எழுத்துகளை மிச்சம் பிடித்துச் சேர்த்து வைத்து நாம் ஒன்றும் செய்யப் போவதில்லை.
தாராளமாகப் பயன்படுத்துவோமாக......!
அருமை👍
ReplyDelete