இப்படியுமா பேசுவது ...?
இன்றைக்கும் தமிழ்நாட்டின் அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் மகாபலிபுரம் எனப்படும் மாமல்லபுரம் அன்று பெருந்திரளால் பிதுங்கி வழிந்து கொண்டிருந்தது . குறிப்பிட்ட ஒரு துறையைச் சேர்ந்தவர்கள் மிக அதிகமாக வந்திருந்தனர். அன்று வந்திருந்த பெருங்கூட்டத்தில் இரண்டு குழுவினரின் உரையாடல்கள் நம்மை உற்றுக் கேட்க வைத்தன. முதலில் வந்த குழுவில் ஒருவர் தன்னுடன் வந்தவர்களுக்கு மாமல்லபுரத்தின் செறிவான வரலாற்றையும் , சிற்பச் சிறப்பையும் ,கலை நுணுக்கங்களையும் விரிவாக விவரித்தபடி வந்து கொண்டிருந்தார். அவரது ஆழமான அறிவும் , விளக்கும் விதமும் நம்மை வியப்பிலாழ்த்தின. சிறிது நேரத்தில் மற்றொரு குழுவின் உரையாடலைக் கேட்க நேர்ந்தது. மிக அலட்சியமாக , கேவலமான தொனியில் வரலாற்றையும் , தொன்மையையும் கிண்டல் செய்கிறேன் பேர்வழி என்று தன்னுடன் வந்தவர்களுக்குத் தனது நகைச்சுவைத் திறனைக் காட்டுவதாக எண்ணிக் கொண்டு தனது அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவரது ஒவ்வொரு நான்சென்ஸ் காமென்டுகளும், உடன் வந்தவர்களின் சிரிப்பும் நாராசமாக இருந்தது. நமக்குப் பின்னால் வரும் மடையர்களுக்கு இதுவெல்லாம் தெரியவா போகிறது என்ற...