நமக்கும் ட்ராஃபிக் சென்ஸுக்கும் ஏன் இத்தனை தூரம்...?
போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க தனியாக கோச்சிங் கிளாஸ் எல்லாம் போக வேண்டாம்.... கோர்ஸும் படிக்க வேண்டாம்.... அடிப்படையான அறிவு இருந்தாலே போதும்....! ஆனாலும் நம்மில் பெரும்பாலானோர்க்கு ஏனோ ரூல்ஸ் ஃபாலோ பண்ணுவதில் அத்தனை சோம்பேறித்தனம்......! குறைந்தபட்சம் 30 கிலோமீட்டர் இடைவேளையில் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்குப் பயணித்தாலே கீழ்க்காணும் பட்டியலில் உள்ள பல நான்சென்ஸ்களைப் பார்க்க முடியும். * இண்டிகேட்டர் போடாமல் சடாரெனத் திரும்பிப் பதைபதைக்க வைப்பது • போட்ட இன்டிகேட்டர் கதறுவது கூடக் கேட்காமல் ஆஃப் பண்ணாமலேயே ஒரு தியான நிலையில் ஓட்டி எங்கு திரும்பப்போகிறார்களோ என சஸ்பென்ஸ் வைப்பது • லெஃப்ட் இன்டிகேட்டரைப் போட்டுவிட்டு ரைட்டில் திரும்பி சர்ப்ரைஸ் கொடுப்பது • நான்கு வழிச்சாலையின் வலப்புற டிராக்கில் சாவகாசமாக ஓட்டிக் கடுப்பேற்றுவது • தலை போகிற அவசரம் போல இரண்டு டூவீலர்களில் பேசிக்கொண்டே பேரலலாக ஓட்டுவது • சாலையின் விளிம்புக் கோட்டைத் தாண்டி வெளியே நிறுத்தாமல் பாதி வாகனம் சாலையில் நீட்டிக் கொண்டி...