தமிழறிவோம்

 

முன்பொரு காலமிருந்தது, வானொலி,தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களால் ஆன ஒருவழித் தகவல் தொடர்புச்சாதனங்களால் மட்டும் ஆன காலமது.

உலக நடப்புகள்,  பொழுதுபோக்கு,  தகவல்கள் மற்றும் செய்திகளைத் தருபவை இவை.   பார்க்கலாம்..கேட்கலாம்…படிக்கலாம்..ஆனால். உடனடியாக நாம் எதிர்வினை ஆற்ற முடியாது. பெரும்பாலும் கடிதங்களாலும் , தொலைபேசி வாயிலாகவும் நமது பின்னூட்டங்களை அனுப்பினாலும் அவை அனைத்துமே பொதுவெளியில் வைக்கப்படும் எனச் சொல்ல முடியாது.

இணையம் நடைமுறைக்கு வந்த பின்பு ,அதிலும் அலைபேசி மூலமாக இணையம் எல்லோருக்கும் சாத்தியமான பின்பு ,அதிலும் அளவில்லாத டேட்டா சேவை கிடைக்கத் தொடங்கிய பின்பு இன்று நிலைமை வேறாக உள்ளது.

சமூகவலைத்தளங்கள்,வாட்ஸப் உள்ளிட்ட மெசெஞ்சர்கள் ,இணையத்தளங்கள்,தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் இணையத்தளங்கள் எனப் பல்வேறு இடங்களில் நாம் நமது கருத்துகளைப் பதிவிட முடிகிறது.

எனவே, எழுதுவதன் தேவை இன்று அதிகரித்திருக்கிறது.

எழுதும்போது ஏற்படக்கூடிய எழுத்துப்பிழைகள், சந்திப்பிழைகளைத் தவிர்க்கும்  முறைகளையும் ,இனிய தமிழ்ழ்சொற்களையும் இங்கு தொடர்ந்து அறிந்து கொள்ளலாம். விரிவான பதிவுகளை  வலைப்பூவில் பார்க்கலாம்.

 ஓர் எடுத்துக்காட்டுடன் தொடங்கலாம்…

இன்று பல இடங்களில் பிழையாகப் பயன்படுத்தப்படும் சொற்களில் ஒன்று ”வருவல்…”

வறுவல் என்பதே சரி.

தொடர்ந்து வருவல் என மனதில் பதிந்து இன்று அனிச்சையாக வருவல் என்றே பலருக்கும் எழுத வருகிறது. வருவள் என்று கூடச் சில இடங்களில் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

வறுத்தலில் கிடப்பது வறுவல்

மீன் வறுவல், குடல் வறுவல் என்பது போல இன்று சிப்ஸ் போன்ற பொருள்களுக்கு  நொறுவல் என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

அறிந்திருப்போம்…….இணைந்திருப்போம்….

நன்றி..!

Comments

Popular posts from this blog

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

நூல் வெளியீடு

ஆனாலும் பாவமந்த அரசுப் பேருந்து நடத்துனர்.