பலரும் எண்ணை என்று சொல்லியும் எழுதியும் வருகின்றனர். எண்ணெய் என்பதுதான் சரி. அதிலும் எண்ணெய் என்பது நல்லெண்ணெய் எனப்படும் எள் எண்ணெயை மட்டுமே குறிக்கும் .ஆனால் வழக்கத்தில் எண்ணெய் என்பது பொதுப்பெயர் ஆகி வெகு நாட்கள் ஆகிவிட்டது. எள் +நெய் என்பதே எண்ணெய் எள் + நெய் ~ எண்ணெய் நெய் என்பது பொதுப்பெயராகத்தான் இருந்திருக்கிறது. எள்ளில் இருந்து எடுக்கப்படும் நெய்தான் எண்ணெய். எள்+ நெய் எப்படி எண்ணெய் ஆகிறது ....? மெய்யீற்றுப் புணர்ச்சி விதியைப் பார்ப்போம். இரண்டு சொற்கள் ஒன்றுடன் ஒன்று புணரும் போது முதற்சொல்லான நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அது மெய்யீற்றுப் புணர்ச்சி ஆகும். எள் +நெய் என்பதில் 'ள்' என்னும் மெய்யெழுத்து நிலை மொழியின் ஈற்றெழுத்தாக இருக்கிறது. வருமொழியின் முதல் எழுத்துக்கள் 'த' அல்லது 'ந' என்பனவாக இருக்கும் பொழுது நிலை மொழியின் ஈற்றெழுத்துக்கள் ன்,ல்,ண்,ள் என்பனவாக இருந்தால் புணர்ச்சி எப்படி நடக்கும் எனக் கீழ்க்காணும் நன்னூல் விதி கூறுகிறது. ”னலமுன் றனவும், ணளமுன் டணவும், ஆகும் தநக்கள் ஆயுங் காலே” (நன்னூல், 237) இவ்வித...
கடைசி வரை இதைப் படிப்பீர்களா என்பது தெரியவில்லை ஆனால் கடைசியில் ஒரு பன்ச் இருக்கிறது. கூகுள் மேப்ஸ்..... அன்றாட வாழ்வின் அங்கம்...... இதை நம்ப முடியாது என்ற குறைகளும் காமெடிகளும் தாண்டி நமக்குப் பேருதவி புரிந்து வருகிறது என்பது முற்றிலும் உண்மை. கூகுள் மேப்ஸில் LOCAL GUIDE என்ற ஒன்று உண்டு .கூகுள் மேப்ஸ் பயனீட்டாளர் ஒவ்வொருவருமே அதில் பங்களிக்க முடியும் .நாம் செல்லும் இடங்களில் உள்ள கடைகள் ,வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் ,மருத்துவமனைகள் சேவைத்தளங்கள், கல்வி நிறுவனங்கள் ,சுற்றுலாத்தலங்கள், வீடுகள், புதிய சாலைகள் உள்ளிட்ட எதையும் நாம் கூகுள் மேப்ஸில் சேர்க்கவோ, நீக்கவோ திருத்தவோ கூகுளுக்குப் பரிந்துரைக்க முடியும் . மேலும் இவ்வகையான இடங்களின் ஃபோட்டோக்கள் மற்றும் விடியோக்களையும் பதிவேற்ற முடியும். ரேட்டிங் மற்றும் ரிவ்யூசும் தர முடியும். இவை எல்லாவற்றுக்குமே கூகுள் நமக்கு பாயின்ட்ஸ் தருகிறது. பலவித BADGEகளும் தருகிறது . நாம் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் லெவல் 1-இல் தொடங்கிப் 10 வரை செல்ல முடியும். இதனால் என்ன பயன் என்றால், நாம் பதிவேற்றும் ஃபோ...
கீழடி அருங்காட்சியகத்துக்குச் சென்றிருந்தபோது அங்கு வந்திருந்த பார்வையாளர்களில் பேரனும் பாட்டியும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. காட்சிப்படுத்தப்பட்டிருந்தவற்றைக் காட்டிப் பாட்டியிடம் இவையெல்லாம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டவை எனப் பேரன் கேட்க, மிகப் பழமையானவை என அறிந்திருந்த பாட்டிக்கு அதனை எண்களால் சொல்ல முடியவில்லை. அந்தக் கணத்தில் மிகப்பெரும் எண்ணாகத் தனக்கு மனதில் பட்டதை வைத்து, "இதெல்லாம் நூறு வருஷம் இருக்கும் ....!" என்றார். தூக்கி வாரிப் போட்டது எனக்கு....! அண்மையில் நண்பர் ஒருவர் பேச்சினிடையே இந்தச் சேர, சோழ ,பாண்டியர்கள் எல்லாம் உண்மையிலேயே இருந்தவர்கள் தானே என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். சேரன் செங்குட்டுவனின் தம்பி தான் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் எனப் பலரும் இன்றும் நம்புகின்றனர் . செங்குட்டுவனின் காலம் கிபி இரண்டாம் நூற்றாண்டு என நம்புபவர்களும் உண்டு .ஆனால் உண்மையில் சேரன் செங்குட்டுவனின் காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. பல்வேறு உலக நாகரிகங்களுக்கு மத்தியில் ...
Cute and sweet ....
ReplyDeleteThank u
ReplyDeleteமகிழ்ச்சி...எழுத்தின் வடிவத்தில் உம்மை பார்க்கின்றேன்...நன்றி!
ReplyDelete