#இரவுகளில் உன் நினைவுகள் என்னைத் தாலாட்டிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் தூங்குவது என்னவோ நீதான்! #இறுக்கமான உனது ஆடைகளின் மீது எனக்குப் பொறாமையாக இருக்கிறது.
இன்றைய கல்விமுறை எத்திசையில் போகிறது என்பதற்கு விடைகள் பலவுண்டு.கல்வி என்பது வயிற்றை நிரப்பும் வழி மட்டும் அன்று, . அது மனிதனை மனிதனாக்கும் ஒன்று என்பது பலருக்கும் தெரியுமோ என்று புரியவில்லை. இன்றைய பள்ளிக் குழந்தைகளைப் பார்த்தால் ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது.எதிர்காலத்தில் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகத்தான் அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். காலையில் ஒரு தம்ளர் பால் மட்டும் அருந்திவிட்டுப் பள்ளி செல்லும் எத்தனையோ குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன். மீறினால் ஓரிரண்டு இட்லிகள் அல்லது பிரட் துண்டுகள் அதனுடன் உண்பார்கள். மதிய உணவாக டப்பவில் அடைக்கப்பட்ட ஜங்க் வகை உணவு.மாலையில் ஏதேனும் கொறித்துவிட்டு ட்யூஷன். "மாலை முழுதும் விளையாட்டு " என்று பாடினார் பாரதியார். மாலையில் பள்ளி விட்டதும் குறைந்தது ஒருமணி நேரமாவது விளையாடுவது என்பது குழந்தைகளில் எத்தனை பேருக்கு வாய்க்கிறது?சக வயதுக் குழந்தைகளோடு சுதந்திரமாக விளையாடுவது எவ்வளவு பயனுள்ளது என்பது பலருக்கும் புரிவதில்லை. உடற்பயிற்சியின் நன்மைகள் மட்டுமின்றி குழு மனப்பான்மை , தலைமைப்பண்பு, வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் ப...