ஏன் செழுங்காரிகை? எதற்குச் செழுங்காரிகை?

காரிகையென்னுஞ் சொல்லுக்கு நான்கு பொருள்களுண்டு.
*காரிகை என்பது அழகினைக் குறிக்கும்.
*காரிகை என்பது பெண்ணையும் குறிக்கும்.
காரிகை என்பது யாப்பருங்கலக்காரிகை என்னும் யாப்பிலக்கண நூலின் சுருக்கப்பெயராகும்.
*எழுத்தெண்ணிப் பாடும் கட்டளைக் கலித்துறைக்கும் காரிகை என்னும் பெயருண்டு.
எவ்வாறாயினும், நாமிங்கு காரிகைக்குச் செழிப்பூட்டிச் செழுங்காரிகை என வைத்துள்ளோம்.
  செழுங்காரிகை என்னுமிவ்வலைப்பூவில் கவிதைகளும், கவிதை இலக்கணமும் வலையேற்றப்படவுள்ளன.கவிதைகளுக்குக் கவிதை மூலமாகவே விடையிறுக்கும் வண்ணம், இவ்வலைப்பூவில் பார்வையாளர்களும் பங்கு பெற வாய்ப்புத் தரப்படுகிறது.
எளிமையான வினாக்கள் கவிதை வடிவில் இங்கு பதியப்படவுள்ளன. உங்களில் யார் வேண்டுமானாலும் அவற்றுக்கு விடை தரலாம்.வினா என்ன வகையான பாவகையிலமைந்திருக்கிறதோ விடையும் அதே பாவகையிலமைந்திருக்க வேண்டுமென்பதே இத்ல் சவால்! மேலும், பெயருக்கேற்ப யாப்பருங்கலக் காரிகையிலுள்ள 44 காரிகைகளும் சீரான கால இடைவெளிகளில் இங்கு விளக்கபடவுள்ளன.  தமிழ்ச்செய்யுளிலக்கணத்தை அலசி ஆராயவும், ஐயங்களைப் போக்கவும், ஆர்வத்தை ஏற்படுத்தவும் மேற்கொள்ளப்படும் இம்முயற்சிக்குத் த்ங்களின் மேலான ஆதரவை வேண்டுவதோடு, குறைகளையும் ,பிழைகளையும் சுட்டிக் காட்டித் தட்டிக் கொடுக்க வேண்டுகிறேன்
மொத்தத்தில் இவ்வலைப்பூவில்
*கவிதை வாசிக்கலாம்
*கவிதை இயற்றி அளிக்கலாம்.
*கவிதை இலக்கணம் அறியலாம்.
*கவிதை சார்ந்த ஐயங்களுக்குத் தீர்வு கேட்கலாம்.
*கவிதை இயற்றும் உங்களது திறமையைச் சோதித்துக் கொள்ளலாம்.

விரைவில் கவிதைக் கேள்வியுடன் வருகிறேன்.

Comments

  1. Priceless effort Rajini. Keep on presenting updates. web profile structure is very nice.
    cheers,
    Ramalingam,
    Kethanur.

    ReplyDelete
  2. கவிதை இலக்கணம் கற்க இத்தளம் மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்,
    By
    அன்புடன்,
    ஜி.ரப்பத் ஃபாத்திமா

    ReplyDelete
  3. யாப்பிலக்கணத்தை வலையேற்றும் இம்முயற்சி பாராட்டுதலுக்குரியது,
    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. hi i want to more about sezhunkaarikai

    ReplyDelete
  5. தங்கள் பதிவை பார்த்தேன். தமிழ் இலக்கணத்தில் ஆசிரியர்கள் வந்தார்கள் என்பதை வேறு எவ்வாறு கூறலாம்?

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி