Posts

Showing posts from November, 2022

ஸியை ஸியை எல்லொய்

 புகழ்பெற்ற எக்கோ டூரிசம் சென்டர் அது. ரிசப்ஷன் டெஸ்க்கில் இருந்த பெண்மணி ஒருவர் மிகத் திறமையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.  அவரது பெயர் என்ன எனக் கேட்ட பொழுது "ஸியை ஸியை எல்லொய்" என்றார் .இவ்வளவு ப்ரொஃபஷனலாக இருக்கும் பெண்ணுக்கு இப்படி ஒரு பெயரா என நான் வியப்பதையும் விழிப்பதையும் கண்ணுற்ற அவர்" என்ட பேரு சிசிலி...!" என்றார் .CICILY  என்பதைத்தான் அவர் ஆங்கிலத்தில் அவ்வாறு ஸ்பெல் பண்ணி இருக்கிறார் . "வீயிஆரொய் என்னைசியி "என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன் . ஓ மை பிரியமான கடவுளே!

டீக்கடை

 2009 அல்லது 10 என நினைக்கிறேன்.... தென்மலை செல்லும் வழியில் செங்கோட்டைக்கு முன்பு வாசுதேவநல்லூருக்கும் கடையநல்லூருக்கும் இடையில் ஒரு டீக் கடையில் நாங்கள் மூன்று பேரும் டீ குடித்தோம். குடித்து விட்டு   எத்தனை ரூபாய் எனக் கேட்கக் கடைக்காரர் ஆறு ரூபாய் என்றார்.   மூன்று பேர் குடித்திருக்கிறோம் ...எனவே மூவாறு பதினெட்டு எனக் கணக்கெட்டு இரண்டு பத்து ரூபாய்த் தாள்களை எடுத்து நீட்டினேன்.  அவர் சில்லறை இல்லை என்றார்.  சரி இரண்டு ரூபாய்க்கு ஏதாவது மிட்டாய் கொடுங்க என்றேன் .   அவர் ஏகத்துக்கும் குழம்பி மொத்தமே ஆறு ரூபாய் தான் என்றார் . அதாவது ஒரு டீயின் விலை இரண்டு ரூபாய்தான். நீங்க எங்கிருந்து வர்றீங்க என அவர் என்னைப் பார்த்து வியக்க ,  மொத்தமே ஆறு ரூபாய் தானா என நான் வாய் முழுவதும் பிளக்க,  பேசாமல் இந்த ஊருக்குக் குடி வந்துவிடலாம் போலயே என நான் நினைக்க,    பேசாமல் இவங்க ஊருக்கு போய் டீக்கடை போடலாம் போலயே என டீக்கடைக்காரர் நினைக்க....     ஒரே ரணகளம் தான்....!

ஒரு கடல் ஒரு கோட்டை.....ஒரு மலை ஒரு நடை....

 பேகல் கோட்டையிலிருந்து ராணிபுரத்துக்கு ......   கேரள மாநிலம் காசரகோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பேகல் கோட்டையைப் பார்வையிட எங்களது மூன்று நாள் பயணத்தில் இரண்டாம் நாளை ஒதுக்கி இருந்தோம். கோட்டையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஓக்ஸ் ரிசார்ட்டில் இரவு தங்கி , காலையில் ஆளுக்கு 3 பூரிகளை சப்ஜியுடன் உண்டு, காஃபி அருந்தி 9 :30 மணிக்கு எல்லாம் கோட்டையின் நுழைவு வாயிலில் செல்ஃபி எடுக்க ஆரம்பித்து விட்டோம். நுழைவுக் கட்டணம் 25 ரூபாய். ஏக்கரில் பரந்து விரிந்த கோட்டை கொத்தளங்கள் ஒவ்வொன்றையும் நடந்து சென்று முழுமையாகச் சுற்றிப் பார்க்க மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டும். புல்வெளிகளும் தோட்டங்களுமாக மூன்று பக்கமும் அரபிக் கடலால் சூழப்பட்டு ரம்மியமாகக் காட்சி தருகிறது பேகல் கோட்டை . கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை இள நீல நிறமாகக் கோட்டையின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் கடல் மூன்று திசைகளிலும் தெரிகிறது.    கிபி 1650 இல் கட்டப்பட்ட இக்கோட்டை பம்பாய் படத்தில் மணிரத்னம் எடுத்த உயிரே பாடலின் மூலம் வெகு பிரபலமாயிற்று. குறைந்த பட்சம் மூன்று நான்கு மணி நேரம் கோட்டை...

சுகபேதி

 கமல்ஹாசன் ஒரு முறை பேட்டியொன்றில் நாம் ஒவ்வொருவரும் ஒரு அவுன்ஸ் மலத்தையாவது எப்பொழுதும் சுமந்து கொண்டுதான் இருக்கிறோம் என்பது போலக் கூறி இருப்பார். உண்மையில் ஒரு அவுன்ஸ் அல்ல அதற்கு மேலும் நாம் ஒவ்வொருவரும் எப்பொழுதும் நமது வயிற்றில் சுமந்து கொண்டே தான் இருக்கிறோம். சற்று முகம் சுளிக்கும் விதமாகத்தான் இனி வரும் வரிகள் இருக்கும்.. இருந்தாலும் உண்மை அதுதான். நமது வயிற்றை, குறிப்பாக குடலைச் சுத்தம் செய்வது என்பது உடல் நலத்தின் அடிப்படையும், ஆரம்பமும் ஆகும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து சாப்பிடும் வழக்கம் தொன்று தொட்டு நம்மிடையே இருந்து வருகிறது. கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் நாம் நமது வயிற்றைச் சுத்தம் செய்து கொள்ள முடியும்‌ . நேரடியாகத் தண்ணீரை குடலுக்குள் விட்டு சுத்தம் செய்வதற்கு உண்டான குழாய்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. எப்படியேனும் குறிப்பிட்ட மாதங்கள் இடைவெளியில் நமது உடலைச் சுத்தம் செய்வது நல்லது. பிறந்ததிலிருந்து இன்று வரை ஒரு முறை கூடச் சுத்தம் செய்து கொள்ளாமல் இருப்பவர்களை இருப்பவர்கள் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன். ...