நந்தினியும் ஷிவாத்மிகாவும்
குதிரைகளின் குளம்படிச் சத்தம் அதிகமாகிக் கொண்டே வந்து அப்படியே தேய்ந்து செல்கிறது .... வடவாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஓசையும், வங்கக்கடலின் பொங்கி எழும் அலை ஓசையும் காதுக்குள் அவ்வப்பொழுது இரைகிறது... வாளும், வேலும், வில்லம்பும் மோதிக் கொள்ளும் சலங் சலங் என்ற ஓசை ஈரடித் தொலைவில் கேட்கிறது... தொலைக்காட்சியிலும், youtube இலும், இதழ்களிலும், நேரிலும் ஆங்காங்கு காண நேரிடும் பெண்களை நந்தினியோடும், வானதியோடும், மந்தாகினியோடும் ஒப்பிடத் தோன்றுகிறது .... சலூனில் ஓடும் டிவியில் திரைப்படத்தில் சரத்குமாரைப் பார்த்ததுமே பழுவூர் அரசருக்குப் பொருத்தமெனமனம் புளகாங்கிதம் அடைகிறது.... நள்ளிரவுகளில் பயணிக்கும் தருணங்களில் பாழடைந்த மண்டபங்களையும், கோவில்களையும் சாலையோரம் தேடத் தோன்றுகிறது.... சற்றுப் பூசினாற் போன்ற தோற்றத்தில் தான் குந்தவை இருந்திருக்க வேண்டும் என அசரீரி ஒலிக்கிறது. ஷிவாத்மிகா ராஜசேகர் நந்தினியாக மனத்திரையில் நடமாடுகிறார் .... தாள்கள் ஓலைச்சுவடிகளாகத் தெரிகின்றன.... கமுகும் கரும்பும், புன்னையும் கொன்னையும் ,கடம்பமும் காந்தளுமாகச் சாலை மருங்குகள் கண்களில் விரிக...