பலரும் எண்ணை என்று சொல்லியும் எழுதியும் வருகின்றனர். எண்ணெய் என்பதுதான் சரி. அதிலும் எண்ணெய் என்பது நல்லெண்ணெய் எனப்படும் எள் எண்ணெயை மட்டுமே குறிக்கும் .ஆனால் வழக்கத்தில் எண்ணெய் என்பது பொதுப்பெயர் ஆகி வெகு நாட்கள் ஆகிவிட்டது. எள் +நெய் என்பதே எண்ணெய் எள் + நெய் ~ எண்ணெய் நெய் என்பது பொதுப்பெயராகத்தான் இருந்திருக்கிறது. எள்ளில் இருந்து எடுக்கப்படும் நெய்தான் எண்ணெய். எள்+ நெய் எப்படி எண்ணெய் ஆகிறது ....? மெய்யீற்றுப் புணர்ச்சி விதியைப் பார்ப்போம். இரண்டு சொற்கள் ஒன்றுடன் ஒன்று புணரும் போது முதற்சொல்லான நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அது மெய்யீற்றுப் புணர்ச்சி ஆகும். எள் +நெய் என்பதில் 'ள்' என்னும் மெய்யெழுத்து நிலை மொழியின் ஈற்றெழுத்தாக இருக்கிறது. வருமொழியின் முதல் எழுத்துக்கள் 'த' அல்லது 'ந' என்பனவாக இருக்கும் பொழுது நிலை மொழியின் ஈற்றெழுத்துக்கள் ன்,ல்,ண்,ள் என்பனவாக இருந்தால் புணர்ச்சி எப்படி நடக்கும் எனக் கீழ்க்காணும் நன்னூல் விதி கூறுகிறது. ”னலமுன் றனவும், ணளமுன் டணவும், ஆகும் தநக்கள் ஆயுங் காலே” (நன்னூல், 237) இவ்வித...
எப்போதும் எல்லாவற்றிலும் உடனிருந்து ஊக்கப்படுத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கும் எனது குடும்பத்தினருக்கும் பேரன்பு கலந்த நன்றியுடன் ஆரம்பிக்கிறேன்....! வெளிப்படுதல் என்பது ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். உணர்வுகள் உச்சகட்டத்தில் எழுத்தாக, இசையாக, ஓவியமாக, சிற்பமாக, நடனமாகப் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படும் போது அவை கலையாகப் பரிணமிக்கின்றன. இலக்கற்றுச் சுற்றித் திரிந்ததைப் பயணக்கட்டுரைகளாக இணையத்திலும் இதழ்களிலும் எழுதி வந்ததையும், அவ்வப்போது கவிதையென எழுதி வைத்த சிறு சிறு குறிப்புகளையும் , தமிழென்னும் பெருங்கடலில் யாப்பென்னும் முத்தெடுக்கத் துழாவி ஆக்கிய செய்யுள்களையும் தொகுத்து நூலாக ஆக்கலாம் என்ற எண்ணம் மேலிடக் காரணமாக இருந்தவர்கள் திரு.சபரியும், திரு. ரகுநாதன் அவர்களும். தனது முகநூல் பக்கத்தின் கருத்துரைப் பகுதியில் எப்பொழுது பயணக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடப் போகிறீர்கள் எனத் திரு .சபரி அவர்கள் என்னை Tag செய்த போது தான் அந்த ஐடியா உதித்தது .நன்றி திரு .சபரி. இந்த ஐடியாவைச் சொல்லி அணிந்துரை கேட்டது...
இளந்தூறலுடனான இரவு . 11:30 மணிக்குக் கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பொள்ளாச்சியை நோக்கிப் புறப்பட்ட பேருந்து ஒன்றில் ஏறிய போது பயணிகளால் அது நிறைந்திருந்தது. முக்கால்வாசிப் பேர் ஆழ்துயிலிலும் அரைத் துயிலிலும் லயித்திருக்க, சிலரிடமிருந்து வந்த மது வாசனை பேருந்து முழுக்கச் சுழன்று அடித்துக் கொண்டிருந்தது . பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவில்பாளையம், சுந்தராபுரம், ஈச்சனாரி என ஒவ்வொருவரும் டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்தனர். " டிக்கெட் ...டிக்கெட்" எனக் கூறியபடி வந்து கொண்டிருந்த கண்டக்டர் தூங்கி வழிந்து கொண்டிருந்த ஒருவரை எழுப்பினார். அவர் சட்டென விழித்துப் பார்த்து " எனக்கு வேண்டாம் " என்றார் பெருந்தன்மையாக. நடத்துனர் கடுப்பாகி, "வேண்டாம்னா இறங்கிக்க" என்றார் .அந்தப் பயணியோ," இல்ல சார்... நான் டிக்கெட் வாங்கிட்டேன்" என்றார். " எப்பய்யா வாங்கினே....? நான் இப்பத் தானே இங்க வரேன்....!" என்றார் நடத்துனர் . "இல்ல சார் ...நான் கவுண்டம்பாளையத்திலேயே வாங்கிட்டேன்..." என்று அவர் கூலாகக் க...
The song is superb to see .... i think u d choreographd 2 ur stdts... your skills might have fallen 2 kannad also.... ok its entertaining
ReplyDelete