RUSKIN BOND
கொல்கத்தாவில் இருந்து டேராடூனுக்கு இரண்டு இரவுகள் ரயிலில் பயணித்துக் காலையில் வந்து இறங்கிய சிறுவன் ரஸ்டிக்கு அவனது பாட்டி தயார் செய்து வைத்திருந்த கஞ்சி, வாட்டப்பட்ட ரொட்டி, முட்டை ஊத்தப்பம், தக்காளியுடன் வறுத்த பன்றி இறைச்சி, வாட்டப்பட்ட ரொட்டிக்கானபழப்பாகு, இனிப்பான பால் விடப்பட்ட தேநீர் ஆகியவற்றைக் கொண்ட காலை உணவுடன் தான் ரஸ்கின் பாண்ட் சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானார். தற்செயலாக ரஸ்டியின் வீர தீரங்கள் என்று தலைப்பிடப்பட்ட மொழிபெயர்ப்பு நூல் ஒன்று கைக்குக் கிடைத்தது. அதன் முதல் அத்தியாயத்தின் முதல் பத்தியிலேயே மேற்கண்ட அசத்தலான எழுத்தின் மூலம் Ruskin Bond என்னை வெகுவாகக் கவர்ந்தார். சந்திப்பிழைகள் மலிந்து கிடப்பதாலும் அப்படி ஒன்று இருக்கிற உணர்வு கூட இல்லாமல் இப்பொழுது பலரும் எழுதுவதாலும் தமிழ் நூல்களாக இருந்தால் ஓரிரண்டு பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டுத் தவிர்த்து விடுவதும் , பிழைகளற்று இருந்தால் எடுத்துக் கொள்வதும் எனது வாடிக்கையாகி விட்டிருக்கிறது. கே பாலச்சந்திரன் என்பவரது தமிழாக்கத்தில் பிழைகளற்ற தெளிந்...