மேகமலை
நிறைய வான்டர்லஸ்ட்டுகளின் லிஸ்டில் சமீப காலங்களில் இடம் பிடித்திருக்கும் ஒரு பெயர் 'மேகமலை'. தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகிக் கொண்டிருக்கும் மேகமலை, " இந்த முறை ஒரு சேஞ்சுக்கு மேகமலையை ட்ரை பண்ணிப் பார்ப்போமே...!" எனச் சுற்றுலா அன்பர்களைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருக்கிறது. மேகமலையில் அப்படி என்ன இருக்கிறது ....? ஊட்டி போலப் பரபரப்பான, ஆர்ப்பாட்டமான ஒரு மலைவாழிடமோ, கொடைக்கானல் போலக் கூட்டம் குவிந்து கிடக்கிற மலை வாழிடமோ, ஏற்காடு போன்ற ஒரு சிறுநகரமோ அல்ல இந்த மேகமலை . இன்னமும் சொல்லப்போனால் மேகமலையை ஓர் ஊர் என்று கூடச் சொல்ல முடியாது அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரண்டு உணவகங்கள், ரிசார்ட்டுகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள், சில அரசு அலுவலகங்கள் , அலுவலர் குடியிருப்புகளை மட்டுமே கொண்டிருக்கின்ற மேகமலையின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், அந்த அமைதியும் தனிமையும் கலந்த அழகும், சிலு சிலுவென்று கிளைமேட்டும்தான். நாம் ஏறத் தொடங்கிய நாளில் வெயில் செம காட்டு காட்டிக் கொண்டிருந்தது. ஏகப்பட்...