கருப்பு -கறுப்பு எது சரி ?
அண்மையில் சகோதரி ஒருவர் இவ் ஐயத்தை எழுப்பி இருந்தார். ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் விவாதங்களுள் ஒன்று இது. சற்று விரிவாகப் பார்ப்போம்....! கரிய நிறம் என்று குறிப்பிடுவதால் கருப்பு என்பதே சரி என்பர் சிலர். கருவிழி கருங்கூந்தல் கருந்தேள் கார்மேகம் காரிருள் கன்னங்கரிய கரிய நிறம் கருங்குழலி கார்வண்ணன் இச்சொற்களை எல்லாம் பார்த்தால் கருப்பு என்ற சொல்லிலிருந்து தோன்றியவை இவை எனப் புரியும். 'கருகரு' என வளர்ந்த கூந்தல் என்பதிலும் கருப்பு என்பதிலிருந்தே கருகரு என்ற அடுக்குத்தொடர் பிறந்திருக்க முடியும். கருப்பு என்பதிலிருந்து அதன் பண்பைக் கொண்ட கரி என்னும் சொல் வந்திருக்கலாம். அடுப்புக்கரி நிலக்கரி என்று எழுதுகிறோம். அடுப்புக்கறி நிலக்கறி என்று எழுதுவதில்லை. "துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா" என்று யானை முகத்தோனிடம் முத்தமிழையும் ஔவையார்...