எளிய தமிழ்....இனிய தமிழ்....!
இன்று சாலையோரம் இருந்த பலகை ஒன்றில் காணக் கிடைத்த சொற்றொடர்..... ’இங்கு எந்த கடைகள் திறக்க அனுமதி இல்லை' இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது யாருக்கும் புரியாமல் இல்லை. இஃதோர் எச்சரிக்கைப் பலகை. இங்கு யாரும் கடைகள் திறக்கக் கூடாது என்பதை இவ்விதமாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் இத்தொடர் எப்படி இருந்திருக்க வேண்டும் எனப் பார்க்கலாம். முதலில், 'எந்த கடைகள்' என்பதில் 'எந்த' என்ற சொல்லுக்குப் பின் வல்லெழுத்து மிகுந்து 'எந்தக் கடைகள்' என வந்திருக்க வேண்டும். அடுத்து, இங்கு எந்தக் கடைகள் திறக்க அனுமதி இல்லை என்ற தொடரானது கேள்விக்குறியுடன் முடிய வேண்டிய ஒரு வினாவாகும். இந்தியாவின் தலைநகரம் எது? வாரத்தின் முதல் நாள் எது? புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தவர் யார் ? என்பவை போல ' இங்கு எந்தக் கடைகள் திறக்க அனுமதி இல்லை ' என்பதுவும் ஒரு கேள்வியாகும். 'இங்கு எந்த கடைகள் திறக்க அனுமதி இல்லை....? விடை: பூக்கடை டீக்கடை புத்த...