கிரிக்கெட் வீரர் தோனியைப் போலவே Chill,cool ,Free flowing type தான் தோனி அருவியும். பாலக்காட்டு மலைகளுக்கு இடையில், அவ்வளவு எளிதில் யாரும் சென்று பார்த்துவிட முடியாத ஓர் உள்ளடங்கிய பகுதியில் ஒய்யாரமாக ஒளிந்து கொண்டிருக்கிறது இந்தத் தோனி அருவி. உயிரினங்களில் மனித நடமாட்டம் மிகக் குறைவாகவும் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகவும் உள்ள தோனி அருவி த்ரில் விரும்பிகளுக்கும் இயற்கைப் பிரியர்களின் அடங்காத ஆர்வத்திற்கும் தீனி போடக்கூடிய அற்புதமான ஸ்பாட். நிறையக் கட்டுப்பாடுகளுடன் தான் தோனி அருவிக்குள் பார்வையாளர்களை அனுமதிக்கிறார்கள். காலை 10 மணிக்கு ஒரு பேட்ச், நண்பகல் ஒரு மணிக்கு ஒரு பேட்ச் என இரண்டு அனுமதிகள் தான் . நாங்கள் தேர்வு செய்தது காலை நேரத்தை. அதற்கு முன்பாக மலம்புழப் பகுதியில் உள்ள கவத் தீவுகளைக் காலை 7 மணிக்கெல்லாம் பார்த்து விடுவது என வாளையாரில் ஆளுக்கு ஒரு ப்ளாக் டீயை மட்டும் உறிஞ்சிவிட்டு நான்கு பேராகக் கவத்தீவுகளை அடைந்துவிட்டோம். மிகப் பெரிய நீர்ப்பரப்பு விரிந்து கிடக்கும் மலையின் பின்பகுதியில் மலைத்தொடரை ஒட்டிச் செல்லு...