பூர்த்தி செய்ய வேண்டாம்; நிரப்பினால் போதும்..!
பூர்த்தி செய்ய வேண்டாம்; நிரப்பினால் போதும்..! பூர்த்தி செய்யவும். ஃபில் ( FILL ) பண்ணவும். இவ்வாறு செய்யவும், பண்ணவும் போன்ற சொற்களை இணைத்துப் பயன்படுத்துவது இப்பொழுது பெருவழக்காகியிருக்கிறது. பொதுவாக, பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தும் போதுதான் இந்த செய்யவும், பண்ணவும் போன்ற சொற்கள் பின்னொட்டாகத் தேவைப்படும். சான்றுக்கு, ரீட் (READ ) பண்ணு ரைட் (WRITE) பண்ணு பேஸ்ட் (PASTE )பண்ணு பூர்த்தி செய்யவும் ஃபில் (FILL )பண்ணு குக் (COOK) பண்ணு ஓபன் (OPEN) பண்ணு க்ளோஸ் (CLOSE ) பண்ணு ஸ்டார்ட் (START) பண்ணு ஆப்பரேட் (OPERATE ) பண்ணு ... பட்டியலுக்கு முடிவே இல்லை.... எளிமையாக , இனிமையாக இவற்றைச் சொல்ல முடியும். ரீட் (READ ) பண்ணு -படி ரைட் (WRITE) பண்ணு - எழுது பேஸ்ட் (PASTE )பண்ணு -ஒட்டு பூர்த்தி செய்யவும் -நிரப்பு ஃபில் (FILL )பண்ணு -நிரப்பு குக் (COOK) பண்ணு -சமை ஓபன் (OPEN) பண்ணு - திற க்ளோஸ் (CLOSE ) பண்ணு - அடை அல்லது மூடு ஸ்டார்ட் (START) பண்ணு -தொடங்கு ஆப்பரேட் (OPERATE ) பண்ணு -இயக்கு ஆனாலும் நமக்கு பண்ணு என்ற சொல் தேவைப்படுகிறது. பூர்த்தி என்பதற்கு இணையாக நிறைவு அல்ல...