முன்னாள் தலைவர்- முந்நாள் தலைவர் ... எது சரி....?
அடிக்கடி வரும் குழப்பங்களுள் இதுவும் ஒன்று. இரண்டில் எது சரி என்றால் இரண்டுமே சரிதான்....! பயன்படுத்தும் இடத்தைப் பொறுத்து.....! முந்நாள் - மூன்று நாள் முன்னாள்- முன்பிருந்த நாள் , முந்தைய நாள் முந்நாள் தலைவர் என்று சொன்னால் மூன்று நாட்களுக்குத் தலைவராக இருந்தவர் ,இருப்பவர், அல்லது இருக்கப் போகிறவர் என்று பொருள். முன்னாள் தலைவர் என்றால் இதற்கு முன்பு தலைவராக இருந்தவர் எனப் பொருள். முன்னால் என்றால் முன்பாக என்பதில் பெரும்பாலும் யாருக்கும் குழப்பம் இல்லை . அதேபோல முந்நூறு , முன்னூறு என்பதிலும் பலருக்கும் குழப்பம் வரும் . மூன்று + நூறு = முந்நூறு முன் + நூறு = முன்னூறு (இதற்கு முன்பு நூறு எனப் பொருள்). மூன்று + நூறு என்பதில் நன்னூல் இலக்கண விதிப்படி மூன்று என்பதில் 'று' மறைந்து ' மூன் ' என்றாகி , ,' மூன் ' என்பதில் ' மூ' என்பது 'மு' எனக் குறுகி, 'ன்' என்பது வருமொழிக்கு ஏற்ப 'ந்' எனத் திரிந்து முந்நூறு எனப் புணர்கிறது. இலக்கண விதிகளை ம...