Posts

Showing posts from October, 2012

கிறுக்கு முற்றியது

Image
கிறுக்கு முற்றியது                      (தாழிசை) கண்ணழகுக்கு இவ்வுலகில்        என்னவிலையும் கொடுக்கலாம்; கண்ணசைவுக் கட்டளையில்       காலன்கூட மயங்கலாம்! உதிர்க்கும் வார்த்தை ஒன்றுக்காக‌       உலகத்தையே துறக்கலாம்; உதட்டு வார்த்தை உத்தரவில்      சொர்க்கம்கூடத் திறக்கலாம்! பக்குவமாய்ப் படைத்தசாமிக்குப்       படையல் ஒன்று போடலாம்; முக்தியடைய அடுத்த பிறவியிலுன்      முகப்பருவாய்ப் பிறக்கலாம்! என்னவளே உன்னழகை       என்ணியெண்ணி வியக்கலாம்; கன்னியுன்றன் முகத்தைகாட்டிக்       கல்லைக்கூட மயக்கலாம்! கன்ணேஉன் கனிமொழியைக்      காலம்முழுதும் கேட்கலாம்; புண்ணியமாய்ப் போகுமொரு      புன்னகை செய் தேவலாம்! கண்மணியின் காலடியில்      காலம் முழுதும் கிடக்கலாம்; - உன் கால்கள்பட்ட இடத்திலெனக்குக்      கல்லறையே கட்டலாம்! உன்விழிய...

அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள்

என்ன இவ்வளவு தாமதமாக ஒரு பதிவா என்று பார்க்காதீர்கள்...இது வேறு கதை ... அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எது  ? இங்கிலாந்து, நியூஸிலாந்து வெளியேறியது... இத்தொடர்கள் எல்லாம் செய்தித்தாள்களில் வந்தவை ..அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்றும் இங்கிலாந்து , நியூசிலாந்து அணிகள் வெளியேறின என்றும் எழுதியிருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்..?  ENGLAND AND NEWZEALAND  IS OUT  என்று யாரும் எழுதுவதும் இல்லை..எழுதினால் அதை யாரும் ரசிப்பதும் இல்லை.......ம்ம்ம்ம்ம்...என்னத்தச் சொல்ல..?போயிட்டு வர்றேன்...