Posts

Showing posts from April, 2012

அத்வானி எப்போது ஊழல் செய்தார்?

அண்மையில் நாளிதழ் ஒன்றில் வாசித்த செய்தி. அத்வானியின் ஊழலுக்கு எதிரான யாத்திரை என்று தொடங்கியது அச் செய்தி. அத்வானி எப்பொழுது எந்தவகையான ஊழல் செய்தாரென்று குழம்பிய நொடியில்செய்தி புரிந்தது. "ஊழலுக்கு எதிரான, அத்வானியின் பயணம் " என்று வந்திருக்க வேண்டிய செய்தி எவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது என்று தெளிவேற்பட்டது.

தூய தமிழ்ச்சொற்கள்

பிராந்தியம் - வட்டாரம், பகுதி டம்ளர் - குவளை ஞாபகம் - நினைவு ஞாபகசக்தி - நினைவாற்றல் கலாச்சாரம் - பண்பாடு  எனக்குத் தெரிந்தவற்றைத் தந்திருக்கிறேன். இவை குறித்த கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். ஒருவன் பிறரிடம் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதைப்பண்பாடு என்றும் அவன் எவ்வாறு இருக்கிறான் என்பதை நாகரிகம் என்றும் சொல்லலாம் என்று எங்கோ படித்திருக்கிறேன். நாகரிகத்துக்குத் தமிழ்ச்சொல் என்ன என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.