ஏன் செழுங்காரிகை? எதற்குச் செழுங்காரிகை?
காரிகையென்னுஞ் சொல்லுக்கு நான்கு பொருள்களுண்டு. *காரிகை என்பது அழகினைக் குறிக்கும். *காரிகை என்பது பெண்ணையும் குறிக்கும். காரிகை என்பது யாப்பருங்கலக்காரிகை என்னும் யாப்பிலக்கண நூலின் சுருக்கப்பெயராகும். *எழுத்தெண்ணிப் பாடும் கட்டளைக் கலித்துறைக்கும் காரிகை என்னும் பெயருண்டு. எவ்வாறாயினும், நாமிங்கு காரிகைக்குச் செழிப்பூட்டிச் செழுங்காரிகை என வைத்துள்ளோம். செழுங்காரிகை என்னுமிவ்வலைப்பூவில் கவிதைகளும், கவிதை இலக்கணமும் வலையேற்றப்படவுள்ளன.கவிதைகளுக்குக் கவிதை மூலமாகவே விடையிறுக்கும் வண்ணம், இவ்வலைப்பூவில் பார்வையாளர்களும் பங்கு பெற வாய்ப்புத் தரப்படுகிறது. எளிமையான வினாக்கள் கவிதை வடிவில் இங்கு பதியப்படவுள்ளன. உங்களில் யார் வேண்டுமானாலும் அவற்றுக்கு விடை தரலாம்.வினா என்ன வகையான பாவகையிலமைந்திருக்கிறதோ விடையும் அதே பாவகையிலமைந்திருக்க வேண்டுமென்பதே இத்ல் சவால்! மேலும், பெயருக்கேற்ப யாப்பருங்கலக் காரிகையிலுள்ள 44 காரிகைகளும் சீரான கால இடைவெளிகளில் இங்கு விளக்கபடவுள்ளன. தமிழ்ச்செய்யுளிலக்கணத்தை அலசி ஆராயவும், ஐயங்களைப் போக்கவும், ஆர்வத்தை ஏற்படுத்தவும் மேற்கொள்ளப்படும் இம்மு...