கோயம்புத்தூர்ப் புத்தகத் திருவிழா -2024
கோயம்புத்தூர்ப் புத்தகத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியிருந்தது .வாங்க வேண்டிய நூல்களின் பட்டியலுடன் நுழைந்த போது, ஞாயிறு பிற்பகல் என்பதால் திருவிழா களை கட்டியிருந்தது. நுழைவு வாயிலிலேயே நல்லதொரு ஃபீல் கிடைத்தது. திருப்பூர் மாவட்டம் துத்தேரிபாளையம் அரசுப் பள்ளியிலிருந்து ஏறத்தாழ 30 மாணவ மாணவியரை ஆசிரியரும், நண்பருமான திரு .வெற்றிவேல் அவர்கள் அழைத்து வந்திருந்தார். வெளியேறிக் கொண்டிருந்த மாணவர்களின் கைகளில் சில புத்தகங்களும் ,பட்டியல்களும் இருந்தன. இந்தப் புள்ளியிலிருந்து அவர்களில் யாரேனும் வாசிப்புலகத்திற்குள் நுழையக் கூடும். இன்றைய உலகின் மிகப் பெரும் டிஜிட்டல் அரக்கர்களான ரீல்ஸ்க்கும் ஷார்ட்ஸ்க்கும் அடிமையாகிக் கொண்டிருக்கும் பதின்ம வயதினர் வாசிப்பின் பக்கம் திரும்புவதெல்லாம் மிகப் பெரும் அதிசய நிகழ்வாகத்தான் இருக்கும் .பெரியவர்களுமே அதற்குக் கட்டுண்டுதான் கிடக்கிறார்கள் .என்னைப் பொறுத்தவரையிலும் ரீல்ஸ்களும் ஷார்ட்ஸ்களும் மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர்கள் என்றாலும் ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்கள் எப்பொழுதாவது தேவைப்படும்போது பார்த்தால் மட்டும் .மற்றபடி அவற்றை ரெஃபரன்ஸ் ...