Posts

Showing posts from March, 2024

இயக்குநர் -இயக்குனர் எது சரி...?

  அண்மையில் சகோதரி ஒருவருக்கு ஏற்பட்ட ஐயம் இது.  இயக்குநர் -இயக்குனர் எது சரி...? பலரிடத்தும் இந்தக் கேள்வி இருக்கும். சொற்களின் இடையில் 'ந' என்னும் எழுத்து வருவது அரிது என்பதால் இயக்குனர் என்பதே சரி எனப்‌பலரும் எண்ணுவர். ஆனால் இயக்குநர் என்பதே‌ சரி. இயக்குநர் - இயக்குனர் மட்டுமல்ல,  ஓட்டுனர் -ஓட்டுநர்  அனுப்புநர் - அனுப்புனர்  பெறுநர்- பெறுனர்....  எனப் பல இடங்களில் இந்த ஐயம் பொதுவாக எல்லோருக்கும் அவ்வப்பொழுது எழுவதுண்டு.  'நர்' , 'ஞர்', 'னர்'   என்ற மூன்று விகுதிகளும் எங்கெங்கு வரும் என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம். 'நர்'  உகரத்தில் முடியும் வினைச்சொல்லை அடுத்து 'நர்' விகுதி வரும்.  எடுத்துக்காட்டு:  ஓட்டுநர்  இயக்குநர்  அனுப்புநர்  பெறுநர்  விடுநர்  இங்கு ஓட்டு, இயக்கு,அனுப்பு,பெறு,விடு  ஆகிய சொற்கள் யாவும் கட்டளைப்பொருளில் ஏவலாக வரக்கூடிய  உகரத்தில் முடிந்த வினைச்சொற்கள். இவை போன்ற சொற்கள் எங்கு வந்தாலும் அங்கு நாம் 'நர்' விகுதியைப் பயன்படுத்துகிறோம். வல்லுநர் ,ஒல்லுநர் போன்ற சொற்களில் ஏவலாக வ...