இப்படியும் பஸ் ஓட்டலாமா...?
தேனியில் இருந்து குமுளிக்கு நான் மேற்கண்ட பேருந்துப் பயணங்கள் எல்லாமே பொறுமையைச் சோதிக்கும் விதத்திலேயே இதுவரை அமைந்திருக்கின்றன. பெரும்பாலும் உருட்டு உருட்டு என்று உருட்டியபடியே நிறுத்தி நிதானமாக ஆடி அசைந்து குமுளியில் கொண்டு போய் விடுகிறார்கள். மூன்று பக்கமும் பனி மூடிய மேற்குத் தொடர்ச்சி மலைகளும் பச்சைப் பசேல் என்ற வயல்வெளிகளுமாகக் கண்களுக்கு இதமாக இருந்தாலும் பேருந்தின் மிக நிதானமான போக்கு ஒருவித அலுப்பைத் தந்துவிடுகிறது. சென்ற வாரம் மீண்டும் சென்றிருந்தபோது இம்முறை நமது கட்டத்தைச் சோதித்துக் கொள்ளலாம் எனத் தேனியில் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது குமுளி என்ற பெயர்ப் பலகையைத் தாங்கியபடி பேருந்து ஒன்று உள்ளே நுழைந்தது. தேர் வலம் வருவது போல மிகப் பொறுமையாக வந்து நின்றது. ஆரம்பமே எனக்கு உணர்த்திவிட்டது. ஏறி அமர்கையில் ஓட்டுநர் கழிப்பிடம் சென்று திரும்பி வந்து நிதானமாக ஏறிக் கதவடைத்துப் பொறுமையாக வண்டியைக் கிளப்பினார். அடுத்து நிகழ்ந்தவை எல்லாம் வரலாற்றுச் சம்பவங்கள். பழைய பேருந்து நிலையம் வருவதற்குள்ளாகப் 15 முறை ஹார்ன் அடித்த...