வகையுளி
அண்மையில் நண்பர் மல்லிகார்ச்சுனன் எனது நூலிலுள்ள செய்யுள்கள் ஒன்றிலிருந்து ஓர் ஐயம் கேட்டார். " சில அடிகளில் சொற்கள் பாதியாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி முன்னுள்ள சொல்லின் பின்னும் மறுபகுதி அடுத்து வரும் சொல்லின் முன்னும் சேர்க்கப்பட்டிருக்கின்றனவே.... ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்.....?" என்பது அவரது கேள்வி. 'வகையுளி'யைப் பற்றிக் கேட்கிறார் என்பது புரிந்தது. பள்ளி நாட்களில் செய்யுள் பகுதிகளைப் படிக்கும் பொழுது எனக்கும் இக்கேள்வி எழுந்ததுண்டு. ஒன்பதாம் வகுப்பில் யாப்பிலக்கணம் கற்கும் பொழுது எனக்குத் தெளிவானது. இதுகுறித்து ஒரு நகைச்சுவையான சம்பவத்தைப் பலரும் கேட்டிருப்பர் . ஒருவன் கடையின் பெயர்ப் பலகையின் முன்பு நின்று கொண்டு , "இங்கு , சாப்பா டுபோ டப்ப டும்" எனப் படித்துக் கொண்டிருந்தான். கூர்ந்து கவனித்த பொழுது "சாப்பாடு போடப் படும்" என்பதைத்தான் அவன் அவ்வாறு படித்துக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது. இதுவே செய்யுளில் வரும்பொழுது வகையுளி எனப்படுகிறது . சான்று: " மலர்...