Posts

Showing posts from May, 2022

வால்பாறை- மலக்கப்பாற- அதிரப்பள்ளி

சேருமிடம் முக்கியம் என்றாலும் பயணங்கள் தரும் பரவசம் அலாதியானது ஆர்ப்பரிக்கும் அழகு மிகுந்த அதிரப்பள்ளி அருவிக்கு வால்பாறை வழியே செல்ல வாய்ப்புக் கிடைத்தவர்கள் இதை முழுமையாக உணரலாம். ஜூன் ஜூலை மாதங்களில் வால்பாறை வழியே வருடத்துக்கு ஒருமுறை அதிரப்பள்ளி செல்வது வழக்கம். ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இவ்வாண்டு பேறு வாய்த்தது. அசாமி புயல் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதுமே நான்கைந்து நாட்களாக மதியம் ஆனால் சுவிட்ச் போட்டதுபோல மழை வந்து விடுகிறது எனக் கேள்விப்பட்டதுமே வருகிற ஜூலை யில் திட்டமிட்டிருந்த ட்ரிப்பை சனிக்கிழமைக்கு பிரீபோன் செய்யலாம் என்று சடாரென முடிவெடுத்தோம். மழைச்சாரலில் அல்லது மழை பெய்து முடித்த இரண்டொரு நாட்களில் இவ்வழி செல்வது ஆகப்பெரும் இன்ப நிகழ்வாக இருக்கும். செவ்வாய்க் கிழமையே வால்பாறை நண்பர்கள் மழை பெய்து வருவதை உறுதி செய்தார்கள் . வலைத்தளங்களில் புதன்கிழமை சோதித்தபோது, சனிக்கிழமையன்று மழைக்கு 80% வாய்ப்பு என்றார்கள். அதுவே வியாழக்கிழமை 90% ஆகி ,வெள்ளி பிற்பகலில் செக் செய்தபோது 100% எனக் காட்டியது .Haze 80 சதவீதம் என வேறு குறிப்பிட்டுத் த்ரில்லைக் ...