தமிழமிழ்து - 2
ஆங்கிலத்திலும் தமிழிலும் வினோதமான ஒற்றுமைகளைக் கொண்ட சொல் இணை ஒன்றை இன்று பார்ப்போம். ஆங்கிலத்தில் வார் என்பது தமிழில் போர் ... தமிழில் வார் என்பது ஆங்கிலத்தில் போர் ... புரியவில்லை தானே.....? தொடர்ந்து படியுங்கள்... ! ஆங்கிலத்தில் WAR ( வார் ) என்னும் சொல்லுக்குத் தமிழில் போர் என்று பொருள். அதுவே தமிழில் வார் என்னும் சொல்லானது வார்த்தல்,வார்ப்பு என்ற பொருளில் வரும் பொழுது அதற்கு இணையான ஆங்கிலச்சொல் போர் ( POUR ) என்பதாகும். எனவே, ஆங்கிலத்தில் வார் - தமிழில் போர் . தமிழில் வார் -ஆங்கிலத்தில் போர் . ஆச்சரியமான ஒன்றுதான் ... இல்லையா...?