நெடுந்தொடர் மலையின் பேரெழில் நெல்லியம்பதி
நெடுந்தொடர் மலையின் பேரெழில் நெல்லியம்பதி ஒரு நாள் வீக் என்ட் பிக்னிக் , இரண்டு பகல்கள் ஓர் இரவு தங்கல் , குடும்பச்சுற்றுலா , நண்பர்களுடன் ஒரு ஜாலி அவுட்டிங் , பைக் ரைடிங் , சோலோ , தேனிலவு என எல்லாவற்றுக்கும் செட்டாகக் கூடிய , ஆனால் அதிகம் அறியப்படாத , அற்புதமான ஒரு மலைவாழிடம் தான் இந்த நெல்லியம்பதி . கேரள மாநிலத்தின் பாலக்காட்டு மாவட்டத்தில் , மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நெல்லியம்பதி கோயம்புத்தூரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலும் பொள்ளாச்சியில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது . தமிழகத்தில் எங்கிருந்து வந்தாலும் கோவை அல்லது பொள்ளாச்சியை அடைந்து அங்கிருந்து நெல்லியம்பதி செல்லவேண்டியிருக்கும் . கோயம்புத்தூரில் இருந்து செல்வதாக இருந்தால் வேலந்தாவளம் சென்று , அங்கு மாநில எல்லை கடந்து சித்தூர் - தத்தமங்கலம் கொல்லங்கோடு...