Posts

Showing posts from March, 2013

ஒளியூறிய நீர்ப்பரப்பின் மேல் தோன்றுகின்ற சிற்றலைகள்.

Image
ஆழியாழம் அமிழ்ந்தும் கட்டற்றுத் தெறித்துச் சுழலும் புவித்திசைக்கு எதிர்ப்பயணம் மேற்கொள்ள, எங்கிருந்துதான் எண்ண‌ங்களை இழுத்துச் செல்கின்றன‌ மறைகின்ற கதிரின் மெல்லிய மஞ்சள் விரவிய‌ ஒளியூறிய நீர்ப்பரப்பின் மேல் தோன்றுகின்ற சிற்றலைகள்...?

கேட்கலாமா கேர்ள்ஸ் சின்னதா சில டவுட்ஸ்..?

பொய்சொன்னாக் கண்டு பிடிச்சுடுவீங்க.....அதே நேரத்துல உண்மையையும் சொல்ல முடியாது...நம்ப மாட்டீங்க ...கரெக்டா..? ஒரு மணி நேரமாமேக்கப் போடுவீங்க...ஆனா  ஒரு நிமிடம் ரசிச்சுப் பாத்தா முறச்சுப் பாப்பீங்கதானே..? உங்களுக்கேத்த ட்ரெஸ்ஸ இதுவரைக்கும் யாரும் தயாரிக்காத மாதிரியே கடைகள்ல தேடுவீங்க....உங்களுக்கேத்த  மாப்பிள்ளையும் இதுவரைக்கும் பொறக்காத மாதிரியே மெதப்பீங்கதானே.....? பத்துப் பேர் கூட இல்லாத பப்ளிக் ப்ளேஸ்ல பத்து லட்சம் பேர் உங்களையே பார்க்கற மாதிரி ஒரு தன்னுணர்வோட நடப்பீங்கதானே...? அரியர்ஸ் க்ளியர் பண்ண ட்யூஷன் போனாலும் எக்சஸ்ட்ராவா நாலு language கத்துக்க க்ளாஸ்க்குப் போற மாதிரியே பில்டப் பண்ணுவீங்கதானே...? இந்த நெயில் பாலீஷும் லிப்ஸ்டிக்கும் இருக்கே...ஆயிரம் ஷேட்ஸ்ல இருந்துசூஸ் பண்னினாலும் மறுநாளே போரடிச்சுப் பழசா ஃபீல் பண்ணுவீங்கதானே..? அஞ்சாந்தேதி அஞ்சுமனிக்கு வந்து மீட் பண்றதா அஞ்சுநாளைக்கு முன்னாலேயே முடிவுபன்ணியிருந்தாலும் அதச்சொல்லாம பிஸியா இருக்கற மாதிரியே நாலாந்தேதி நாலு மணி வரைக்கும் சீனப்போடுவீங்கதானே...? ...ஜூட் வுடறதுக்கு முன்னால ஒரு முக்கியமான மேட்...

சிறுசலன‌ங்களை மீட்டெடுக்கும் முயற்சி

Image
பகிர்தலின் பேரின்பத்தைப் புரிதல் யாருக்கும்  வாய்க்கவில்லை! வெளிப்படுத்தலுக்காகவே ஏங்கிக்கிடக்கும் சிறுசலன‌ங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் விடாமல் தொடர்வதற்கான‌ காரனத்தை அறுதியிட இயலவில்லை! ஆனாலும் நிகழ்ந்து முடிந்ததை மீட்டுருவாக்கத் துடித்தே மாய்கின்றன‌ உறக்கம் தொலைந்த இரவுகள்!