உன்னாலானவை
ஓரக்கண்ணால் ஒருநொடி பார்த்ததற்கே உடைந்து போனேன்! ஒருநிமிடம் உற்றுப்பார்த்தால் உருகிப்போவேனோ உறைந்துபோவேனோ தெரியவில்லை!! எல்லாப்பொருட்களுமே அணுக்களாலானவை என்கிறது அறிவியல்! எனது உடலிலுள்ள அணுக்கள் எல்லாமே உன்னாலானவை!!