வினா என்னுடையது- விடை உங்களுடையது..
ல,ள,ழ- இந்த மூன்று எழுத்துகளும் இடம் பெறும் சொற்களைக் கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தோம். 'தொழிலாளி' என்ற சொல்லை அதில் அறிமுகப்படுத்தியிருந்தோம் .வீடியோவுக்கான உரலியை முதல் காமென்ட்டில் பதிந்து இருக்கிறேன். 'கள்' விகுதி இல்லாமலேயே நிறையச் சொற்களை அன்பு என்பவர் பகிர்ந்திருந்தார். வாழ்த்துகள் அவருக்கு ....! அவர் பகிர்ந்த சொற்களின் பட்டியல் கீழே...! மலைப்பழத்துள் பழத்திலுள்ள பலாப்பழத்தினுள் நிலையிழந்தாள் ஆழ்கடலினுள் எழிலாள் வேல்விழியாள் மலர்விழியாள் கழல்விழியாள் கயல்மொழியாள் களச்சூழ்நிலை பூம்பொழிலாள் 'கள்' விகுதியுடன் மழலைகள் சூழல்கள் இவ்வெழுத்துகள் இடம்பெறும் மிகச்சிறிய சொல் குறைந்தபட்சம் நான்கெழுத்துகளைக் கொண்டதாக இருக்கும் . ஏனெனில் இம்மூன்றும் மொழிக்கு முதலில் வாரா. அங்ஙனம் தொழிலாளி என்பதுடன் எழிலாள் என்ற நான்கெழுத்துச் சொல்லை அன்பு அவர்களின் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது. மதிப்பிற்குரிய திரு லட்சுமண சாமி அவர்களும் திருமதி யசோதை அவர்களும் நிறையச் சொற்களைப்...