தமிழ் உங்களை எங்கு குத்துகிறது?
அனாடமியிலோ, ஜியாகிரபியிலோ அல்ல, பேசுவதில், எழுதுவதில்,படிப்பதில்,கேட்பதில் தமிழ் உங்களை எங்கு இடர் செய்கிறது? ஐயாயிரம் ஆண்டுகளாகப் பல்லாயிரங்கோடி மக்களின் நாவிலும், செவியிலும், எழுதுகோல்களிலும், சுவடிகளிலும் சரளமாகப் புழங்கிவந்த மொழி, இன்று கைவரப் பெறவில்லையெனில், அதன்மீது குறையிருக்கும் என்றெனக்குத் தோன்றவில்லை. இரண்டு நிகழ்வுகள் அண்மையில் வெகுவாக என்னைப் பாதித்தன. இவ்வாண்டின் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுதேர்வுகளில் முதல் தேர்வான தமிழ் முதல்தாளை எழுதி முடித்து விட்டு வந்த எனது எனது அண்டை வீட்டாரின் மகளிப் பற்றி அவரிடம் கேட்டேன் , எப்படித் தேர்வு எழுதியிருக்கிறாளென்று..அதற்கு அவர் சொன்னார்:தமிழ் அவளுக்கு எப்பவுமே டஃபுங்க(tough), நெறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவா, படிக்கிறதே எழுத்துக் கூட்டித்தான் படிப்பா, ஃப்ரென்ச் கிடைக்காததால்தான் தமிழ் சூஸ் ( choose ) பண்ணினா..... நாளைக்கும் அவளுக்குக் கஷ்டந்தான்!(தமிழ் இரண்டாம் தாள்)அது முடிஞ்சதுனா மத்த எல்லாப் பேப்பரும் நல்லா எழுதிடுவா" எனது நண்பர் ஒருவர் நல்ல பாடகர். ஆனாலவர் பாடல்களைப் பாடும்போதும் பதிவுசெய்யும் போதும், பயிற்சி எடு...